சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ தண்ணீர் குடிக்க கூடாது என தெரியுமா?

சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ தண்ணீர் குடிக்க கூடாது என தெரியுமா?

நம்மில் பலரும் சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் அதிகம் சாப்பிட முடியாது என வேடிக்கையாக கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே சாப்பாட்டிற்கு முன்னோ அல்லது பின்னோ தண்ணீர் குடிக்க கூடாது. அப்படி செய்தால் உடலில் பல விதமான இடையூறுகள் ஏற்படுத்தி விடும் அவற்றை இப்போது பார்க்கலாம்.

சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ தண்ணீர் குடிக்க கூடாது:-

  • சாப்பிடும் முன்னோ அல்லது பின்னோ தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள கேஸ்ட்ரிக்கின் தன்மைக் குறைக்கப்படுகிறது. இதனால் செரிமான மண்டலம் வலுவிழக்கிறது.
  • உடல் நல பிரச்சனைகளுக்காக மருந்துகளை சாப்பிடுபவர்கள் சாப்பாட்டுக்கு பின்/ முன் என சாப்பிட வேண்டி இருக்கும். அவர்கள் கூட அதிக அளவில் நீரை அருந்த வேண்டாம்.
  • உணவுக்கு முன்/ பின் விக்கல் எடுத்தாலோ அல்லது அதிக தாகம் எடுத்தாலோ குறைவான தண்ணீர் மட்டுமே அருந்துங்கள். இதமான் வெப்ப நிலை உள்ள நீராக இருந்தால் நல்லது. குளிர்ந்த நீரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் செரிமான மண்டலம் சீராகும்.
  • சிலர் ஹோட்டலில் சாப்பிட சென்று விட்டு உணவருந்திய பின்னர் குளிர்பானங்களை ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இதனை செய்வதன் மூலம் உடல் நலம் அதிகமாக பாதிப்படையும்.

 

 

Share this story