கொத்தமல்லி ஜூஸ் குடித்தால் எவ்வளவு நன்மை தெரியுமா?
Tue, 12 Sep 2017

அன்றாடம் உணவில் சேர்க்க கூடிய ஒரு மூலிகை கொத்தமல்லி இலை என சொல்லலாம். இது உணவிற்கு மணம் மற்றும் சுவையை மட்டும் கொடுப்பது மட்டுமில்லாமல் உடலுக்கு பல விதமான நன்மைகளை தரக் கூடியது. இது மருத்துவ குணம் நிறைந்தது. இதை ஜூஸ் செய்து குடித்தால் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை சரி செய்யலாம்.
கொத்தமல்லி ஜூஸ் தயாரிக்கும் முறை:-
கொத்தமல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர் ஊற்றி கழுவி பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஜூஸ் தயார்.
நன்மைகள்:-
- கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை போக்க வல்லது. குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை சரி செய்யக் கூடியது.
- கொத்தமல்லியில் உள்ள என்சைம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட வைக்கும்.
- இரத்த சோகை இருப்பவர்கள் இதை குடித்தால் நல்ல பலனை பெறலாம். மேலும் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ச்சியாக குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
- செரிமானத்தை சீராக்கி குடல் மற்றும் இரைப்பைக்கு நன்மை அளிக்கிறது. கொத்தமல்லி அதிக அளவிலான கால்சியத்தை கொண்டுள்ளது. எனவே எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.