வாழைப் பழத்தை தலைமுடி பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

வாழைப் பழத்தை தலைமுடி பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

தலைமுடி பிரச்சனை யாருக்கு தான் இல்லை. தலைமுடி பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காண வாழைப் பழத்தை பயன்படுத்தலாம். இது எளிதில் கிடைக்க கூடிய பழம் தான். இதை தலைமுடி பிரச்சனைக்கு பயன்படுத்தும் வழிமுறையை இப்போது பார்க்கலாம்.

வாழைப் பழத்தை தலைமுடி பிரச்சனைக்கு பயன்படுத்தும் முறை:-

  • வாழைப்பழத்தை அரைத்து தயிர் மற்றும் பால் சேர்த்து தலைமுடியில் தடவி காய்ந்ததும் சீயக்காய் தேய்த்து குளித்தால் தலைமுடி வறட்சி தடுக்கப்பட்டு முடி உதிர்தல் குறையும்.
  • வாழைப் பழம், அவகேடா மற்றும் தேங்காய் பால் மூன்றையும் கலந்து தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து தலைமுடியை அலசினால் போதும் முடி உதிர்தல் கட்டுபடுத்தப்படும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஆலிவ் ஆயில் மற்றும் தேன், வாழைப்பழம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைமுடியில் தடவி குளிர்ந்த நீரினால் தலைமுடியை சுத்தம் செய்தால் தலைமுடிக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கப்பட்டு முடி வலுவடையும்.
  • அரைத்து வைக்கப்பட்ட வாழைப்பழத்துடன் பாதாம் எண்ணெய் சேர்த்து தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பு தேய்த்து குளித்தால் முடி ஆரோக்கியமாக வளரும்.
  • வாழைப்பழத்துடன் தேங்காய் பால் சேர்த்து தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் தலைமுடியை அலசினால் முடியின் வறட்சி நீங்குவதோடு பொடுகும் மறையும்.

Share this story