குதிரை வாலி அரிசி தெரியுமா?
Sun, 3 Sep 2017

சாதாரண அரிசியை போலவே தோற்றம் தரும் இந்த குதிரை வாலி அரிசியும் நல்ல சுவை மிக்கதே. இதை சமைத்து சாப்பிடுவதால் நமக்கு அதிகம் ஆரோக்கியமே.
குதிரை வாலி நன்மைகள் :
ரத்த சோகை வராமல் நம்மை பாதுகாக்க தேவையான ஊட்ட சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் அனைத்தும் குதிரை வாலியில் காண படுகிறது.
- குதிரை வாலியை சமைத்து சாப்பிட இதில் அடங்கி இருக்கும் நார் சத்துக்கள் அனைத்தும் நேரடியாக கிடைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது மற்றும் மலச்சிக்கலால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
- இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலை கட்டுக்கோப்பாகவும் சீராகவும் செயல் பட செய்து ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது.
ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை குறைப்பதிலும் மற்றும் சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்து கொள்ளவும் உதவுகிறது.
தசைகள், எலும்புகளுக்கு வலிமை கொடுத்து செயல் படுவதோடு ஆண்டி ஆக்ஸிடண்ட்டாக செயல் படுகிறது
ரத்த நலன்களில் ஏற்படும் கோளாறுகள் அடைப்புகள் வராமல் பராமரிக்கும் குதிரை வாலியை சமைத்து சாப்பிடு பயனை பெறுங்கள்.