அவோகேடோ பழம் தெரியுமா உங்களுக்கு???

அவோகேடோ பழத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்பீர்களா என்று தெரிய வில்லை ஆனால் அது கொடுக்கும் அழகு ரகசியங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
அழகு குறிப்புகள் :
அவோகேடா பழத்தில் இருந்து தயாரிக்க படும் எண்ணெயை பயன்படுத்த கோடைகாலங்களில் ஏற்படும் கொப்பளங்கள் மறைந்து சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும்.
கடலை மாவுடன் அவகேடோ பழத்தை சேர்த்து முகத்தில் பயன்படுத்த வயதானாலும் இளமையான தோற்றத்தை காட்டும்.
முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு முக தோற்றத்தை கெடுக்கிறதா, அவகேடோ பழத்தின் சதை பற்றை நன்கு மசித்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து முகத்தை வெறும் நீரால் கழுவி வர முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து அழகான தோற்றத்தை பெறலாம்.
இதில் இருக்கும் வைட்டமின் இ கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும் தன்மை கொண்டது. இதன் சதை பற்றுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கலந்து தேய்த்து பின் ஷாம்பு போட்டு குளிக்க கூந்தல் உதிர்வதும் குறைந்து நீளமான முடியை பெறலாம்.