கடுக்காயை உடலின் பல பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தும் முறை பற்றி தெரியுமா?
Sep 8, 2017, 12:00 IST

கடுக்காய் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள் தான். நம் முன்னோர் காலத்திலிருந்து இதை நாட்டு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். கடுக்காயை பயன்படுத்தி உடல் உபாதைகளை சரி செய்யும் முறையை பற்றி இப்போது பார்க்கலாம்.
கடுக்காய் பயன்கள்:-
- கடுக்காயை பொடியாக்கி மோரில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் வயிற்றுப் போக்கை சரி செய்யும்.
- கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து தினமும் இரவில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை சரியாவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் சரி ஆகும்.
- உப்புடன் கடுக்காய் பொடியை சேர்த்து பல் தேய்த்து வந்தால் பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலி சரியாவது மட்டுமில்லாமல் வாய் துர்நாற்றம் சரியாகும்.
- கடுக்காய் பொடியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் திரிபலா சூரணத்தை இதமான நீரில் சேர்த்து பருகி வந்தால் செரிமானம் மற்றும் வயிற்று பிரச்சனைகள் சரியாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவை மூன்றும் சேர்ந்த கலவையே திரிபலா சூரணம் எனப்படும்.