புதியதாக மனை வாங்க செல்லும் போது கவனிக்க வேண்டிய சகுனங்கள் பற்றி தெரியுமா?

புதியதாக வீடு கட்டவோ அல்லது வியாபார நிறுவன்ங்கள் தொடங்கவோ தேவையான காலி மனைகள் வாங்க செல்லும் போது சில சகுன்ங்களை பார்ப்பது நல்லது.
நல்ல சகுனங்கள்:-
காலி மனை வாங்க செல்லும் போது கோவில் மணி ஓசை, நாதஸ்வர இசை, கல்யாண ஊர்வலம், கோவில்களில் பூசை நடப்பது, பசுமாடு எதிரில் வருவது, புது மண ஜோடிகள் எதிரில் வருவது, யாரேனும் பூஜைப் பொருள்களை கொண்டு செல்லுதல், தேரோட்டம், குழந்தை பிறந்த செய்தி, துவைத்த துணியை கொண்டு வருதல், நிறைகுடத்துடன் பெண்கள் செல்வது, பால்காரன் எதிரில் வருவது போன்றவை நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இதில் ஏதேனும் நடந்தால் கட்டிடப்பணி சிறப்பாக நடைபெறும்.
கெட்ட சகுனங்கள்:-
தெருவில் மனிதர்கள் சண்டை போடுவது, நாய்கள் சண்டை போடுவது, பெண் தலைவிரி கோலமாக வருவது, எலும்பு துண்டுகளை சாலையில் பார்ப்பது, இறந்து போனவர்களுக்கு காரியம் செய்ய செல்பவர்களை பார்ப்பது, ஒற்றைக் கண் உள்ள ஆள்களை பார்ப்பது, மரம் சாய்ந்து கிடப்பதை பார்த்தல், விபத்து காட்சிகள் போன்றவற்றை பார்ப்பது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. எனவே மேற்கண்ட எதையேனும் பார்க்கும் போது நீங்கள் செல்லும் காரியத்தை வேறு நாளுக்கு மாற்றுவது நல்லது.