Tamil Wealth

குடல்களில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

குடல்களில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

குடல்களில் புண்கள், எரிச்சல் போன்றவை ஏற்பட காரணமே ஒழுங்கான உணவு பழக்கம் இல்லாமலும், அதிக மன அழுத்தங்களுக்கு ஆளாகுவதாலும் தான் ஏற்படுகிறது. தொண்டையில் ஏற்படும் அரிப்புகள், வலிகள் குடலில் ஏற்படும் கோளாறுகளுக்கு அறிகுறியாக இருக்கும்.

வயிற்று வலி :

கேஸ்டிரிக் அல்சர் என்ற பெயர் வயிற்றில் வலிகள் ஏற்படுத்துவதை குறிக்கும் மற்றும் தொண்டையில் இருந்து சிறு குடல் வரை வழு வழுப்பான தன்மை குறைவாகவே காண படும், இதனை வைத்தே தெரிந்து கொள்ளலாம் நீங்கள் குடல் புண்களால் பாதிக்க பட்டுள்ளீர்கள் என்று.

அறிகுறிகள் :

எப்பொழுதும் சாப்பிட பின் அடி வயிற்றில் வலி உருவாகும் மற்றும் டியோடினல் என்ற பகுதி வயிற்றில் காண படும், இதில் வலி 3 மணி நேரத்திற்கு இருக்கும்.

உணவு சாப்பிட்டாலே வயிற்றில் காந்த நிலை உருவாகும்.

உணவுகளை விழுங்கும் பொழுது உணவு குழாய்களில் அரிப்புகள் ஏற்பட்டு வாந்தி, தலை சுத்தல் உண்டாகும்.

கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு வலிகள் உருவாகும், கல்லடைப்பு பாதிப்புக்கு உள்ளாகுவீர்கள். இதனால் ஏற்படும் அபாயம் ரத்தத்தை அசுத்த படுத்தும் மற்றும் தசைகள் அழுகும் நிலை உருவாகும்.

குடல் புண்களால் அரிப்புகள் ஏற்பட்டு ரத்த கசிவுகள் வயிற்றில் சென்று பல வித நோய்களை ஏற்படுத்தி, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும்.

குடல் புண்களை குண படுத்த உதவும் மூலிகை மருந்து :

வீட்டில் சமையலில் பயன்படும் ஏலக்காயை நீரை போட்டு நன்கு கொதிக்க செய்து பின் அந்த நீரினை மட்டும் தினம் அருந்தி வர குடல்களில் எவ்வித கோளாறுகளும் வராது, இதனுடன் மற்ற காய்கறிகளின் சாற்றினையும் கலந்து குடிக்க  நல்ல பலனை தரும்.

செய்முறை :

வாழை பழத்தை எடுத்து நன்கு நசித்து வைத்து கொள்ளுங்கள், அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மசியுங்கள் மற்றும் இனிப்பு சுவைக்கு சர்க்கரைக்கு பதிலாக தேனை கலந்து அருந்த நல்ல மருந்து.

பழக்க வழக்கம் :

அதிக கலோரிகள் இருக்கும் உணவுகள் மற்றும் மன அழுத்தத்தை உண்டாகும் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் மற்றும் உடலில் இருக்கும் இரும்பு சத்துக்களை அதிகரிக்க மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை உட்கொள்ள கூடாது.

Share this story