வீட்டில் ஏற்றும் மெழுகுவர்த்தியினை பற்றி தெரியுமா??

வீட்டில் பூஜைக்காகவும் மற்றும் மின்சாரம் இல்லாத சூழ்நிலையிலும் பயன்படும் மெழுகுவர்த்தியினை பற்றி காணலாம். நம் வீட்டிற்கு ஒளி கொடுப்பது போன்ற நன்மை இருப்பது போலவே தீய செயல்களும் உள்ளன.
மெழுகுவர்த்தி :
தங்கள் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் கேக்கில் மெழுகுவர்த்தியை வைத்து கொண்டாடுகின்றனர். ஆனால் அதில் இருக்கும் வேதி பொருட்கள் கேக்கில் கலந்து நாம் உண்ணும் பொழுது நம் உடலில் சேர்ந்து கேடு விளைவிக்கும் என்பது அறியாது செய்கிறார்கள். அதேப்போல் மெழுகுவர்த்தியை வீட்டில் ஏற்றி பயன்படுத்த அதில் இருந்து வெளிப்படும் புகையை சுவாசிக்க அது நம் உடலில் மூச்சு குழாய் வழியே செல்வதால் சுவாச கோளாறுகள் ஏற்பட்டு அதன் மூலம் இதய நோய்கள், கல்லீரலில் கோளாறுகள் என பிரச்சனைகள் எழ கூடும்.
வீட்டின் சுற்றுப்புறத்தை பாதித்து வீட்டில் இருக்கும் அனைவரின் உடலுக்கும் கேடு விளைவிக்கிறது.
இதில் இருக்கும் நச்சு தன்மைகள் உடலில் சென்று நுரையீரல்களில் பிரச்சனையை ஏற்படுத்தி அதனால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.