காலையில் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

காலையில் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரு மனிதனுக்கு உணவு மிக முக்கியமானது. அதிலும் காலையில் சாப்பிடும் உணவில் புரோட்டின், கால்சியம், கார்போஹைட்ரேட், கால்சியம் இருக்க வேண்டியது மிக முக்கியம். காலையில் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி பார்ப்போம்.

  • பழங்கள், காய்கறிகள், பால் போன்றவை கலந்த உணவு சாப்பிட வேண்டும்.
  • எண்ணெய் மிகுந்த உணவுகளை சாப்பிட கூடாது.
  • வெண்ணெய் கலந்த புரோட்டா காலையில் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும்.
  • எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் உணவான பூரி காலையில் சாப்பிடுவது நல்லதல்ல. அதற்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடலாம்.
  • முளைக்கட்டிய பயிர்களால் செய்யப்படும் சாலட் காலையில் சப்பிடலாம்.
  • நூடுல்ஸ் சாப்பிடுவது கேடு விளைவிக்க கூடிய ஒன்றாகும். அதற்கு மாற்றாக சேமியாவை சமைத்து சாப்பிடலாம்.
  • உப்புமா அல்லது இட்லியை சாப்பிடலாம்.
  • சாக்லேட்களில் அதிக அளவு சர்க்கரையும், கலோரிகளும் நிறைந்து உள்ளதால் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த உணவு அல்ல.

Share this story