கல்லீரலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள் பற்றி தெரியுமா?

கல்லீரலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள் பற்றி தெரியுமா?

நமது உடலின் மொத்த இயக்கத்திற்கும் தேவையான ஆற்றலை கொடுப்பது கல்லீரல் மட்டும் தான். மேலும் கல்லீரல் உணவுகளை செரிமானம் செய்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பொறுப்பும் உள்ளது. அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடும் போது கல்லீரலின் செயல்திறன் பாதிக்கிறது. இதை தடுக்க சில உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது.

கல்லீரலை சுத்தம் செய்ய உதவும் உணவுகள்:-

  • கேரட் மற்றும் பீட்ரூட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் தன்மைக் கொண்டது.
  • தினமும் கீரை வகையான உணவுகளை சாப்பிட்டால் போதும். அதில் உள்ள க்ளோரோபில் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது,
  • முட்டைக் கோஸில் உள்ள அதிகப்படியான சல்பர் கல்லீரலில் உள்ள என்சைம்கள் சுரக்க உதவுகிறது. இதன் மூலமாக கல்லீரல் நச்சுகள் வெளியேற்றப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
  • ஆப்பிள் மற்றும் க்ரே பழங்களை சாப்பிடுவதால் கல்லீரலை சுத்தப்படுத்துவது மட்டுமில்லாமல் அதன் வேலைகளை திறம்பட செய்ய உதவுகிறது.
  • பூண்டில் உள்ள அலிசின் எனப்படும் பொருள் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிக்கு எதிராக போராடுகிறது.

Share this story