Tamil Wealth

கண்ணை சுற்றியுள்ள பகுதியை பராமரிக்கும் முறை பற்றி தெரியுமா?

கண்ணை சுற்றியுள்ள பகுதியை பராமரிக்கும் முறை பற்றி தெரியுமா?

கண்களை எப்படி பராமரிக்க வேண்டுமோ அதை போலவே கண்ணை சுற்றியுள்ள பகுதிகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். இல்லையேல் உங்கள் கண்கள் பார்ப்பதற்கு சோர்வாகவும், பொலிவில்லாமலும் இருக்கும். கண்களினை சுற்றி இருக்கும் பகுதிகள் பாதிப்பதற்கு முக்கிய காரணம் சூரிய ஒளி, வாக்சிங் செய்வது, அழகு சாதன பொருள்கள் பயன்படுத்துவது போன்றவை தான் முக்கிய காரணமாகும்.

கண்ணை சுற்றியுள்ள பகுதியை பராமரிக்கும் முறை:-

கண்களுக்கு பயன்படுத்தக் கூடிய கிரிம்கள் நிகோடினிக் என்ற அமிலத்தை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த வகையான கிரீம்களை உள்ளங்கையில் எடுத்து கண்களை சுற்றி உள்ள பகுதிகளில் தடவினால் போதும் சருமம் எந்த பிரச்சனைக்கும் உள்ளாகாது.

வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி கண்களில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் போதும். கண்கள் எப்போது ஈரப்பதத்துடன் இருக்கும். இதன் காரணமாக கண்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

உருளைக்கிழங்கின் சாறை எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் காட்டனில் நனைத்து எடுத்து கண்களை சுற்றி தடவினால் போதும். கண்கள் சோர்வின்றி காணப்படும்.

பயன்படுத்திய கிரீன் டீ பேக்குகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் அதை கண்களில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் போதும். கண்கள் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் மாறலாம்.

 

Share this story