Tamil Wealth

தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பொடுகை போக்கும் வழிமுறைகள் பற்றி தெரியுமா?

தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பொடுகை போக்கும் வழிமுறைகள் பற்றி தெரியுமா?

எல்லா காலத்திலும் தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது தான். இதற்கு முக்கிய காரணம் போதிய அளவு ஊட்டச்சத்துகள் தலைமுடிக்கு கிடைக்காதது தான் காரணம். மேலும் தலைமுடியில் போதுமான ஈரப்பசை இல்லாமல் இருந்தால் முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனை ஏற்படும். தேங்காய் எண்ணெயை கீழ்கண்ட வழிகளில் பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

  • தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரவள்ளி எண்ணெயை 5 : 1 என்ற விகிதத்தில் எடுத்து தலைமுடியின் அடிவரையிலும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு அலசினால் பொடுகு நீங்கும்.
  • தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறினை கலந்து தலைமுடியில் அடிப்பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
  • காற்று புகாத ஒரு பாட்டிலில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரத்தை சேர்த்து தினமும் இரவு தூங்கும் முன்னர் தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
  • தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தயிர் இவை மூன்றையும் சரியான அளவில் எடுத்து தலையின் அடிப்பகுதியில் படும்படி மசாஜ் செய்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.
  • வறட்சியான சருமத்தை சரி செய்ய ரோஸ்மேரி எண்ணெய்க்கு முக்கிய பங்கு உண்டு. இந்த எண்ணெயை தேங்காய் என்ணெயுடன் சரி அளவில் எடுத்து தடவி முடியில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவினால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

Share this story