உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கார்போஹைட்ரேட் உணவுகள் பற்றி தெரியுமா?
Sep 12, 2017, 09:00 IST

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் பொதுவாக உடலுக்கு நல்லது இல்லை என பலரும் கூறுவார்கள். ஆனால் எல்லா கார்போஹைட்ரேட்டும் தனித்தனி பண்பை பெற்றிருக்கும். பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை கலந்த உணவுகள் உடலுக்கு தீங்கை தரக்கூடியவை. உடலுக்கு நன்மை தரக் கூடிய கார்போஹைட்ரேட் உணவுகளை இப்போது பார்க்கலாம்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கார்போஹைட்ரேட் உணவுகள்:-
- ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் இவை இரண்டிலும் அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. வாழைப்பழம் செரிமானத்தை அதிகரித்து இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.
- சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் பீட்ரூட் இரண்டிலும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
- ஆரஞ்சு மற்றும் பெர்ரி வகை பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்களை பெற முடியும். ஆரஞ்சு இதய நோய் வராமல் தடுப்பதோடு இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களில் அதிக அளவி வைட்டமின் மற்றும் ஆக்ஸிஜனேற்ற தன்மைகள் உள்ளன. எனவே இதை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
- சுண்டலில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. மேலும் பல விதமான வைட்டமின்கள், தாது பொருள்கள் உள்ளன. இது செரிமானத்தை சீராக்க உதவும். மேலும் இதயநோய் மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.