Tamil Wealth

பருக்களை போக்க உதவும் தானியம் தெரியுமா உங்களுக்கு!

பருக்களை போக்க உதவும் தானியம் தெரியுமா உங்களுக்கு!

சருமத்தில் ஏற்படும் பருக்களை போக்க உதவும் தானியத்தில் புரதம், நல்ல கொழுப்பு, ஆன்டிஆக்ஸிடென்ட் , நார்ச்சத்து, மினெரல் போன்றவை அடங்கி உள்ளது. இதனை பயன்படுத்தி நாம் எப்படி பருக்களை போக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாமா!

அக்ரூட் பருப்பு :

அக்ரூட் பருப்பை கொண்டு முகத்தில் ஏற்படும் பருக்களை எப்படியெல்லாம் போக்கலாம் என்று யோசிக்கிறீங்களா!

 

செய்முறை :

#1

அக்ரூட் பருப்பை நன்கு நொறுக்கி கொள்ளுங்கள். ஒரு குவளையில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் மற்றும் அக்ரூட் துகள்களை சேர்த்து கொண்டு நன்கு கலக்குங்கள். பேஸ்ட் செய்து அதனுடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தேனை கலந்து கொண்டு முகத்தில் பயன்படுத்த சரும கோளாறுகள் நீங்கி, மென்மையான சருமத்தை கொடுக்கும் மற்றும் பருக்களால் ஏற்படும் தழும்புகளை மறைய செய்யும்.

#2

தயிர் மட்டுமே பயன்படுத்த முகத்தில் ஏற்படும் பருக்கள், எண்ணெய் கசடுகள், கரும் புள்ளிகள் மறையும், அதோடு இந்த அக்ரூட் துகளை சேர்த்து கொண்டு பேஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அனைத்து புறங்களிலும் தேய்த்து மசாஜ் செய்யுங்கள், பின்னர் 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினை கொண்டு கழுவுங்கள்.

#3

முகத்தில் உண்டாகும் கருமை நிறத்தை போக்கவும் மற்றும் பருக்களை நீக்கவும் உதவும் வகையில் சர்க்கரை அல்லது தேனுடன் அக்ரூட் துகள்களை சேர்த்து சருமத்தில் பயன்படுத்துங்கள். இதனை உதடுகளில் பயன்படுத்தவும் நல்ல சிவந்த உதடுகளை பெறலாம் மற்றும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாகிய பொலிவை கொடுத்து சிவப்பழகை கொடுக்கும்.

#4

அக்ரூட் பருப்பில் இருக்கும் பொட்டாசியம் உடலில் இருக்கும் கெட்ட நீரினை வெளியேற்ற உதவுகிறது மற்றும் இது அதிக சத்துமிக்கவை என்பதால் சாப்பிட்டாலும் நன்மைகள் அதிகமே, அரைத்து சருமத்தில் பயன்படுத்தவும் நல்லதே.

#5

சூரியனின் தாக்கத்தினால் உருவாகும் சரும கோளாறுகளை நீக்க அக்ரூட் பருக்களை சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கு பயன்படுத்த கரும் திட்டுகள், கருமை நிறம் வெண்மை நிறமாக மாறும், புத்துணர்ச்சியை கொடுத்து பிரகாசத்தை கொடுக்கும்.

#6

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கவும் அக்ரூட் பருப்பில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உதவுகிறது. என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அக்ரூட் சாப்பிடுங்கள் பயனை பெறுங்கள்.

 

Share this story