அடிக்கடி தலை வலி வருகிறதா?
Sat, 9 Sep 2017

தலை வலியால் இன்று அதிக பாதிப்புகள் வருகின்றன. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தும். தலை வலிக்கு பயன்படுத்தும் தைலம் போன்ற பொருட்களை தவிர்த்து காய்கறிகளை கொண்டும் வழியை போக்கலாம்.
வழிமுறைகள் :
- வீட்டில் சமையலுக்கு உதவும் முட்டைகோஸ் சாற்றினை இறுக்கமாக கட்டி தலையில் வைத்து வர வலிகள் குறையும்.
இது ஒரு எண்ணெய் போன்ற தோற்றத்தை தரும் மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. - கனிகளின் தோல்கள் காய்ந்த பிறகு அதனை அரைத்து நெற்றியில் வைக்க வலி குறையும். முக்கியமாக எலும்பிச்சையின் தோல்களை பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
- தாளிக்க பயன்படும் கடுகை இடித்து பொடியாக்கி நீருடன் கலந்து மூக்கில் சில துளிகள் விட அது தலை வலியை குறைத்து நிவாரணம் தரும்.
- கருப்பு முந்திரியை சாப்பிட தலை வலி நீங்கும் அல்லது அதனை ஜூஸ் செய்து குடித்து வர வலி குறையும். ஜூஸ் என்றால் அதில் சர்க்கரை எதுவும் சேர்க்க கூடாது வெறும் சாற்றினை மட்டும் அருந்த வேண்டும்.