Tamil Wealth

கை, கால்களில் உண்டாகும் கருமையை இருக்கிறதா, நீக்க வேண்டுமா! இதை படியுங்கள்!

கை, கால்களில் உண்டாகும் கருமையை இருக்கிறதா, நீக்க வேண்டுமா! இதை படியுங்கள்!

கை, கால்களில் இருக்கும் கருமை நிறம் தோற்றத்தை கெடுக்கும். இதனை சரி செய்ய வேதி பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையில் உருவான பொருட்களை கொண்டு கருமையை நீக்கலாம் மற்றும் அழகும் பெறலாம்.

சில வழிமுறைகளை காணலாம் :

குளிக்கும் பொழுது உபயோகிக்கும் சோப்பு தவிர்த்து கடலை மாவை நீருடன் கலந்து பேஸ்ட் போல் செய்து பூசி குளிக்க கை, கால்களில் கருமை இருக்கும் இடங்களில் நிற மாற்றத்தை காணலாம். நாளடைவில் கருமை நிறம் நீங்கி சரும தோற்றம் அழகாகும் மற்றும் சம நிறத்தை பெரும், மிருதுவான சருமத்தை பெறலாம்.

கஸ்தூரி மஞ்சளை நீருடன் கலந்து தினம் முகத்தில், கை, கால்களில் கருமை இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்து குளித்து வர வேண்டும். மஞ்சளில் இருக்கும் நற்குணங்கள் நிறத்தை மாற்றி சிவப்பழகை கொடுக்கும்.

பேசியல் செய்முறை :

பாலுடன் அல்லது பாலாடையுடன் மஞ்சளை கலந்து கருமை இருக்கும் இடத்தில் பயன்படுத்த நல்ல பொலிவை கொடுக்கும் மற்றும் இதனுடன் தயிர் கலந்து உபயோகிக்கலாம். சிறிது நேரங்கள் கழிந்த பிறகு நீரினை கொண்டு கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வர முகத்தின் அழகு கூடுவதோடு, சுருக்கங்கள் மறையும், கோடுகள் மறையும் மற்றும் பருக்கள் தொல்லையே இருக்காது.

தயிரை அப்படியே முகத்தில் தடவுவது போலவே கருமை இருக்கும் இடத்திலும் தினம் உபயோகிக்க சிறிது சிறிதாக கருமை நிறங்கள் மறைந்து வெண்மை தோற்றத்தை கொடுக்கும். அழகான, மென்மையான சருமத்தை அள்ளி தரும் தன்மை கொண்டது.

 

Share this story