உங்களுக்கு பாதம் பருப்பை அதிகம் உண்ணும் பழக்கம் இருக்கிறதா ? அப்படினா இதை படியுங்கள்!

பாதாம் பருப்பில் இருக்கும் சத்துக்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது தான், ஆனால் அளவுக்கு மீறினால் எந்த அமிர்தமும் நஞ்சு தான் என்பதையும் மறவாமல் உணவுகளை உட்கொள்ள வேண்டும். எந்த உணவையும் அளவோடு சாப்பிடுங்கள் அப்படி சாப்பிடுவதே அதில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் அனைத்தும் நமது ஆரோக்கியத்திற்கு போதுமான போஷாக்கை கொடுக்கும். இல்லையென்றால் சில இன்னல்களை சந்திக்க நேரிடும்.
பாதாமை அதிகம் சாப்பிடலாமா ?
கண்களில் கோளாறுகள் உண்டாகுமா!
பாதாம் பருப்பின் ருசியில் மயங்கி அதனை தினம் உட்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் உட்கொண்டால் அதில் இருக்கும் வைட்டமின் இ அதிக அளவில் உடலில் சேருவதால் சில உடல் உபாதைகளை சந்திப்போம் மற்றும் கண்களுக்கு தேவையானதே வைட்டமின் இ தான். ஆனால் இதனை அதிகம் சாப்பிட சிறிது நாட்களில் கண்களில் பார்வை குறைபாடுகள் வரும் மற்றும் வயிற்றிலும் சில பிரச்சனையை உண்டு பண்ணும்.
அளவான முறையில் சாப்பிட வேண்டும்!
பாதாம் பருப்பை ஒரு நாளைக்கு அதிக அளவில் உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள். அளவான முறயில் எடுத்து கொள்ளுங்கள், ஒருவர் ஒரு நாளைக்கு 40 கிராமிற்குள் எடுத்து கொள்ளுங்கள். அதற்கு மேலே செல்லும் அளவிற்கு எடுத்து கொள்ளவே கூடாது. 40 க்கு குறையலாமே தவிர அதிகரிக்க கூடாது.
உடல் எடையை குறைக்க வேண்டுமா ?
பாதாமில் இருக்கும் அதிகமான கொழுப்பு சத்துக்களை நாம் தினம் இதனை உட்கொண்டால் கண்டிப்பாக உடல் எடையை விரைவில் அதிகரிக்கும். ஆகையால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணுவோர் பாதாம் பருப்பை அன்றாடம் அதிகம் எடுத்து கொள்வதை முற்றிலும் தவிர்த்து ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுங்கள்.
நார்ச்சத்துக்கள் அதிகமா?
தினம் நாம் பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிட அது முதலில் பாதிப்பது வயிற்றை தான். இதனால் வயிற்றில் வலிகள், வயிற்று போக்கு, எரிச்சல் போன்றவை வர கூடும். அளவுக்கு அதிமாக சாப்பிடும் பொழுது நார்ச்சத்துக்கள் அனைத்தும் சென்று வயிற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தி உடலை சோர்வான நிலைக்கு தள்ளி விடும்.
ஹைட்ரோசயனிக் அமிலம் :
எவ்வளவு சாப்பிடுகிறோமோ அவ்வளவு ஹைட்ரோசயனிக் அமிலம் உடலில் சென்று முதலில் பாதிப்பது சுவாச உறுப்புகளை தான். இது சுவாசத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.