Tamil Wealth

வாழைப் பூவை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

வாழைப் பூவை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பயன்படக் கூடிய ஒன்று தான். இதன் முக்கிய குணநலன் அறிந்தே நம் முன்னோர்கள் இதை முக்கனிகளில் ஒன்றாக சேர்த்து உள்ளனர். வாழை மரத்தின் இலையில் சாப்பிட்டால் உணவின் ருசி அதிகமாகவே காணப்படும். அதே போல் இதன் பட்டையை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும். வாழைப் பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

வாழைப் பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-

  • வாரத்திற்கு இரண்டு முறை இதை உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்படுவதோடு இரத்த ஓட்டம் சீராகும். இதன் காரணமாக இரத்த சோகை வராமல் பார்த்து கொள்ள முடியும்.
  • வாழைப் பூவை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் செரிமான கோளாறுகள், வயிற்றுப் புண், வாயுத் தொல்லை மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
  • இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது. மேலும் மூல நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • ஒரு சிலர் எந்த பற்பசையை பயன்படுத்தி எத்தனை முறை பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் குறையாது. வாழைப் பூவை உணவில் சேர்ப்பதன் மூலம் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற முடியும்.
  • பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் நீரிழிவு நோய்க்கு சிறந்த உணவாக கூட இதை சொல்லலாம்.

Share this story