அடிக்கடி காப்பி குடிக்கலாமா? தெரிந்து கொள்வோமா?

காலை எழுந்தவுடன் காப்பி அருந்தாமல் சிலரால் இருக்கவே முடியாது. காலை எழுந்தவுடன் காப்பி குடிக்க புத்துணர்ச்சி பெறுவோம். சிலர் உடற்பயிற்சியை செய்து முடித்த பின் காப்பியை குடிப்பதை பழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். இப்படி செய்வதால் உடற்பயிற்சி செய்தும் பயன் இல்லை. கரைந்த கலோரிகள் உடற்பயிற்சி செய்த பின் காப்பி அருந்துவதால் கலோரிகள் எரிக்க படாது.
காப்பியில் இருக்கும் நன்மைகள் :
காப்பியை எழுந்தவுடன் குடிக்கலாம். இது உடற்பயிற்சி செய்வதினால் ஏற்படும் இளைப்பு மற்றும் உடல் வலிகள் வராமல் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. காலை தூக்க கலக்கம் இன்றி, சோர்வு இல்லாமல் செயல் ஆற்றலாம்.
மெட்டபாலிசம் அதிகரிக்கும் :
காலையிலே உடற்பயிற்சி செய்வதற்கு முன் சூடான காப்பி குடிக்க உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து காலை உடல் நல்ல செயல் திறனை பெற்று சுறு சுறுப்புடன் இயங்கும். உடற்பயிற்சியும் சிறப்பாக செய்யலாம்.
காப்பியை அதிகம் குடிக்காதீங்க ?
காப்பியை அளவாகவே அருந்துவதே நல்லது. ஒரு நாளைக்கு ஒரு தடவை அருந்துங்கள். அதிகமாக அருந்த அதுவே பழக்கம் ஆகும்.காப்பியும் ஒரு வித போதை போலவே அதற்கு அடிமையாக்கி விடும். சில உடல் நல கோளாறுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆகையால் அளவான முறையில் எடுத்து கொள்ளுங்கள். இரவு காப்பியை தவிர்த்து விடுவது நல்லது, ஆழ்ந்த உறக்கத்தை பெறலாம்.