Tamil Wealth

செல்லப்பிராணியை படுக்கை அறை வரை அனுமதிக்கிறீர்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

செல்லப்பிராணியை படுக்கை அறை வரை அனுமதிக்கிறீர்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

எல்லோர் வீட்டிலும் செல்லப்பிராணிகள் என்று நாய், பூனை வளர்க்கின்றனர். இதனால் நமக்கு நோய் தொற்றுகள் ஏற்படுமா என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம், பார்க்கலாமா!

செல்லப்பிராணி :

சிலர் எப்பொழுதும் தனது செல்லப்பிராணியுடன் அமர்ந்து உண்ணுவது, விளையாடுவது, தூங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். செல்லப்பிராணிகள் என்றாலும் அவைகளின் உடலில் இருக்கும் நுண்கிருமிகள், தொற்றுகள் அனைத்தும், நம்முடன் சேர்ந்து உறங்க மற்றும் சாப்பிடும் பொழுது உணவுகளில் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவும் செல்லப்பிராணிகளை மேற்க்கூறிய வேளைகளில் தவிர்ப்பது நல்லது.

பழக்கம் ஆகிவிட்டதா ?

செல்லப்பிராணியுடன் தான் உறங்குவேன் என்று சிலர் கூறுவார்கள். அவர்கள் தாங்கள் உறங்கும் பொழுது செல்லப்பிராணியையும் தன்னுடன் சேர்த்து உறங்குவார்கள். இந்த பழக்கம் நல்ல உறக்கத்தை தரும் விதமாக பழகி விட்டார்கள். அதோடு நோய் தொற்றுக்களை ஏற்படுத்தாமல் கவனத்துடன் இருக்க வேண்டும். செல்லப்பிராணிகளையும் தினம் சுத்தம் செய்ய வேண்டும், அது அவைகளை பாதுகாப்பதோடு அதனால் நமக்கு ஏற்படும் தொற்றுகளையும் ஏற்படாமல் தடுக்கும்.

செல்லப்பிராணிகளை படுக்கையில் சேர்த்து அணைத்து கொண்டு உறங்குவதை தவிர்த்து விடுங்கள், அது உங்கள் தூக்கத்தை பாதிக்கும் மற்றும் அவைகள் உமிழ்நீர் நம் மேல் படுவதினால் சில கோளாறுகளை காணலாம்.

Share this story