Tamil Wealth

உணவில் அதிகம் தயிர் சேர்த்து கொள்கிறீர்களா? இதை படியுங்கள் !

உணவில் அதிகம் தயிர் சேர்த்து கொள்கிறீர்களா? இதை படியுங்கள் !

கோடைகாலங்களில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் வகையில் உணவில் அதிகம் சேர்க்கும் தயிரை பற்றி தெரிந்து கொண்டு அதிகம் எடுத்து கொள்ளலாமா வேண்டாமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சத்துக்கள் அடங்கிய தயிர் :

தயிரில் இருக்கும் வைட்டமின் டி , கால்சியம் அடங்கி இருப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமே. எலும்புகளின் உறுதிக்கும் மற்றும் எலும்பு மச்சைகளுக்கும் ஊட்ட சத்துக்களை கொடுக்கிறது. பற்களின் வளர்ச்சிக்கும் மற்றும் வலிமைக்கும் உறுதுணையாக விளங்குகிறது.

தினம் சாப்பிடலாமா ?

சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் தயிரை தினம் தங்கள் உணவில் கலந்து உண்ண அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் நமக்கு நன்மை தர கூடியதே. நாம் உட்கொள்ளும் தயிர் சாதம்  வயிற்றில் சென்று வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் நல்ல நிவாரணியாக கருத படுகிறது.

தயிர் என்றாலே அதிக குளிர்ச்சியை கொண்டது. ஆகையால் மழைக்காலங்களில் அதிகம் உட்கொள்ள வேண்டாம். குளிர் காலம் அதிக தயிரை எடுத்து கொள்ள அது ஜலதோஷம் மற்றும் இருமல், தொண்டையில் சளி சேர்ந்து பேச முடியாத நிலை உருவாகும் மற்றும் காய்ச்சல் போன்றவைகள் வர கூடும். அதனால் மழைக்காலங்களில் தவிர்த்து கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய் :

  • இன்று அதிகம் பாதிக்கப்படுவது சர்க்கரை வியாதியால் தான். இதனை கட்டுப்படுத்தவும் மற்றும் வராமல் தடுக்கவும் பயன்படும் வகையில் உருவானதே தயிர்.
  • கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தினால் உடலில் நீர் சத்துக்கள் குறையும் மற்றும் உடலுக்கு சோர்வை கொடுக்கும். இதனை சரி செய்யும் வகையில் சாதத்துடன் தயிரை கலந்து எடுத்து கொள்ள புத்துணர்ச்சியை கொடுத்து வெயிலுக்கு இதமாகவும் இருக்கும் என்பது உண்மையே.
  • புரோடீன்கள் அதிகம் இருப்பதால் தயிரை அதிகம் உட்கொள்ள மன அழுத்தம் மற்றும் மூளையின் செயல் திறனை அதிகரிக்கும். இதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உடலில் இருக்கும் நச்சு தன்மையை நீக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனையே அதிகரிக்க செய்கிறது.

Share this story