பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடியை நீர்க்க வேண்டுமா?
Tue, 12 Sep 2017

பெண்களின் முகத்தில் வளரும் முடிகளை நீக்க தேவையான பொருட்கள்.
1.எலும்பிச்சை
2.சர்க்கரை
3.மஞ்சள்
4.கடலை மாவு
- முகத்தில் உதடுகளுக்கு மேல் வளரும் முடிகள் மற்றும் தாடையில் வளரும் முடிகள் போன்றவற்றை நீக்க எலும்பிச்சை சாற்றினை அனைத்து இடங்களிலும் நன்கு தேய்த்து மசாஜ் செய்து வர நாளடைவில் முடிகள் உதிர்ந்து நல்ல தோற்றத்தை தரும்.
- பெண்கள் சிறு வயதிலே மஞ்சள் தேய்த்து குளித்து வர இளமை பருவத்தில் முகத்தில் மற்றும் கை, கால்களில் வளரும் முடிகள் உதிர்த்து நல்ல பொலிவான சருமத்தை கொடுக்கும்.
- கடலை மாவை மஞ்சளுடன் கலந்து உபயோகிக்க முடி உதிர்வதோடு கூடுதல் அழகையும் கொடுத்து பருக்கள், எண்ணெய் கசடுகள் நீங்கி, கருமை நிறம் மாறி வெண்மை தோற்றத்தை கொடுக்கும் திறன் கொண்டது.
- சர்க்கரையினை பாகு போன்று நன்கு காய்ச்சி அதனை முகத்திற்கு எலும்பிச்சை சாற்றுடன் கலந்து தினம் பூசி வர முடிகள் உதிர்ந்து விடும் மற்றும் கண்களிற்கு கீழ் வரும் கருவளையம் மறைந்து கண்களையும் அழகான தோற்றத்தோடு தரும்.