நம் சமையல் பொருட்களிலும் வேதி பொருட்கள் இருக்குமா?

நம் சமையல் பொருட்களிலும் வேதி பொருட்கள் இருக்குமா?

இன்று இயற்கை முறையில் காய்கறிகளை உருவாக்குவதை தவிர்த்து செயற்கை முறையில் உருவாக்கும் நிலை வந்து விட்டது. நாம் அன்றாடம் உண்ணும் உணவில் கூட வேதி பொருட்கள் கலந்து இருக்கும் அபாயம் உள்ளது. அதனை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

வேதி பொருட்களை கொண்டுள்ள பொருட்கள் :

தக்காளி :

வீட்டில் அன்றாடம் சமையலில் பயன்படும் தக்காளியின் இலைகள், தண்டுகளில் காண படும் க்ளைகோ அல்கலாய்டு நச்சு தன்மையே, தக்காளியின் இலைகளையோ அல்லது தண்டுகளையோ சாப்பிட்டால் சில உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.

குறைபாடுகள் :

  • உடல் சோர்வை கொடுத்து நரம்புகளில் தளர்ச்சியை உருவாக்கும்
  • வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தி, வலிகள் உருவாகும் மற்றும் வயிற்று உப்புசதம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

அசைவ உணவுகள் :

நாம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளிலும் காண படுகிறது, வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கும், மாடுகளுக்கும், கோழிகளுக்கும் தீவனம் கொடுக்க ஆன்டிபயாடிக் உதவுகிறது, இதனை அதிக அளவில் உட்கொள்ளும் அவைகளை நாம் உணவாக எடுத்து கொள்ளும் பொழுது ஆன்டிபயாடிக் நமது உடலில் சென்று தீமையை உண்டு பண்ணும் பாக்டீரியாக்களை உருவாக்கி நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும்.

குறைபாடுகள் :

  • உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறனையும் குறைத்து விடும்.
  • நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை குலைக்கும்.

ஜெர்ரி பழம் :

ஜெர்ரி பழங்களில் இருக்கும் சதை பற்று மட்டுமே நல்லது, அதனை விதைகள், இலைகள் அதிக நச்சு தன்மை கொண்டது.

பாலிதீன் பைகள் :

உணவுகளை உருவாக்கி பாலீதீன் பைகளில் போட்டு நீண்ட நாட்கள் வைத்து இருக்கும் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கெடவில்லை என்று நினைத்து உண்ண கூடாது.

குறைபாடுகள் :

  • உடல் கோளாறுகளை ஏற்படுத்தும்
  • வயிற்று போக்கு
  • தலை சுத்தல்
  • வாந்தி
  • உயிர்க்கு ஆபத்தாக கூட அமையும்

வேதி பொருட்கள் :

உடலில் செல்லும் வேதி பொருட்கள் நச்சு தன்மையை ஏற்படுத்தி உள்ளுறுப்புகளை பாதிக்கும் மற்றும் மெட்டாபாலிக் ஸ்ட்ரெஸ் என்னும் அழுத்தத்தை கொடுத்து பல வித நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

பாதாம் பருப்பு :

பாதாம் பருப்பை பச்சையாக விரும்பி சாப்பிடுவர்களுக்கு அதில் இருக்கும் சயனைடு என்ற நச்சு பொருளை பற்றி தெரிவது இல்லை. ஆகையால் பச்சையாக உண்பதை தவிர்த்து வறுத்து சாப்பிடுங்கள்.

Share this story