நார்த்தம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்குமா?
Apr 25, 2018, 11:08 IST

நார்த்தம்பழம் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை போலவே புளிப்பு சுவையுடையது. இதில் அதிக அளவிலான சிட்ரஸ் அமிலம், மக்னீசியம், தாது உப்புகள் அடங்கியுள்ளன. நார்த்தம்பழம் உடலுக்கு புத்துணர்ச்சியை அழிக்க கூடியது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் ஆற்றலை கொண்ட பழம். மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நன்மை அளிக்கக்கூடியது. இதன் மற்ற பிற பலன்களை இப்போது பார்க்கலாம்.
- நார்த்தம் பழத்தில் மிகச்சிறிய அளவு கூட கொலஸ்ட்ரால் இல்லாத காரணத்தால் இதயத்திற்கு எந்த விதத்திலும் ஆபத்தை ஏற்படுத்தாது. எனவே இதய நோயாளிகள் இதை தைரியமாக சாப்பிடலாம்.
- நம்முடைய ஒரு நாளுக்கு தேவையான கால்சியத்தின் 60% பங்கை ஒரு நார்த்தம் பழம் கொண்டுள்ளது. எனவே தினமும் இரண்டு நார்த்தம்பழத்தை சாப்பிட்டால் எலும்பு மற்றும் பற்கள் சம்மந்தமான பிரச்சனை வராமல் பார்த்து கொள்ள முடியும்.
- ஆண்களின் விந்தணுக்களின் வளர்ச்சிக்கும், வளமானதாக மாற்றவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- புற்றுநோய், பக்கவாதம் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம்.
- சிறுநீரக கற்களை கரைக்க நார்த்தம் பழம் முக்கியமாக பயன்படுகிறது. சிறுநீரக கற்களை எவ்வளவு வேகமாக கரைக்க முடியுமோ அவ்வளவு வேகமாக கரைக்கும் மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகாமல் பார்த்து கொள்ளும்.
- இதில் உள்ள வைட்டமின் பி அதிகமாக உள்ளதால் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. அது மட்டுமில்லாமல் பற்கள் மற்றும் ஈறுகள் சம்மந்தமான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும்.