Tamil Wealth

அடிக்கடி இந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம்?

அடிக்கடி இந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம்?

நாம் சாப்பிடும் எந்த உணவிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பதை மறவாமல் உட்கொள்ளுங்கள். நன்கு சாப்பிட, பின் மறுபடியும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகம் உட்கொள்ள நீங்கள் சந்திக்கும் பாதிப்புகள் அதிகமே.

முக்கியமாக எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது அதற்கு பதிலாக இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை அருந்துவது நன்மை பயக்க கூடியது.
பழ ஜூஸ் எடுத்து கொள்ள நல்ல ஊட்ட சத்துக்களை பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம். பயறு வகைகள் சாப்பிடுவதால் அதில் இருக்கும் புரோடீன்கள் , புரத சத்து அனைத்தும் நமக்கு ஆரோக்கியமே.

நீர் ஆகாரம் என்ற பெயரில் குளிர் பானங்களை குடிக்க கூடாது. ஆரஞ்சு , ஆப்பிள் போன்ற கனிகளில் இருந்து பெறப்படும் பழ சாற்றை அருந்துவதே நல்லது.

கோடைகாலங்களில் தேவையான நீர் சத்து அனைத்தும் தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்களில் இருந்து நமக்கு கிடைக்கும்.

ஸ்னாக்ஸ் என்று சிப்ஸ், கார வகைகள் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள் பட்டாணி, சுண்டல், பழங்கள் என்று.

Share this story