தலை முடிகள் உதிர்ந்து வழுக்கை உருவாவதை தடுக்கனுமா? சருமத்தையும் பராமரிக்கனுமா?

இன்றைய தலைமுறையினருக்கு சிறு வயதிலே அதிக முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை ஏற்படும் நிலை உருவாகிறது. இதனை சரி செய்யும் சில வழிமுறைகளை தெரிந்து அதன்படி செய்யலாம்.
முடி உதிர்வு :
முடி உதிர்வை முதலில் தடுக்க வேண்டும். அதற்கு இயற்கை முறையில் செய்யும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
முடி உதிர்வை தடுக்க மாதுளை பழத்தின் தோலினை தூர வீசாமல் அதனை அரைத்து அதில் இருந்து தயாரிக்க படும் எண்ணெயை தலைக்கு பயன்படுத்த வேண்டும். இதனுடன் செம்பருத்தியை கொண்டு தயாரிப்பட்ட எண்ணெயையும் பயன்படுத்த நல்ல பலனை தரும்.
சருமத்தை பராமரிக்குமா ?
சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளுக்கு மாதுளை தோலில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை பயன்படுத்தலாம். கண்களில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க வேண்டும் என்றால் மாதுளை எண்ணெயை துணியில் நனைத்து கண்களை சுற்றி நன்கு தேய்க்க வேண்டும். இது கண்களில் ஏற்படும் வீக்கம், மங்கிய நிலை, கருவளையத்தையும் போக்கும் தன்மை கொண்டது.
கூந்தலை பராமரிக்க உதவும் :
முந்தைய காலத்தில் குளித்து முடித்த உடன் தலைக்கு சாம்பிராணி பொடியை கொண்டு முடிக்கு புகை மூட்டுவார்கள். இதனால் முடி நன்கு வளர்ச்சி பெரும் மற்றும் உதிர்வுகள் தடுக்க படும். இப்பொழுது யாரும் அதனை கடைபிடிப்பது இல்லை. மாதுளை எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு தலை முடிக்கு வெந்நீரை கொண்டு ஆவி பிடிக்க நல்லது.
பருக்களை போக்கும் மாதுளை :
முகத்தில் உருவாகும் பருக்களை நீக்க மாதுளை எண்ணெயுடன் வேப்பிலை சாறு மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து உபயோகப்படுத்த பருக்கள் மறைந்து அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும் மற்றும் எண்ணெய் சருமத்தை கொண்டவர்கள் இதனை பயன்படுத்த முகம் நல்ல பொலிவை பெறும்.
காயங்களை குண படுத்தவும் மற்றும் வெடிப்புகளை உருவாகும் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. தினமும் இதனை பயன்படுத்த நாளடைவில் உங்கள் சருமத்தில் ஏற்பட்ட கோளாறுகள் அனைத்தும் நீங்கி அழகை பெறுவீர்கள்,