Tamil Wealth

நோய்களை தீர்க்கும் கீழாநெல்லி!!

நோய்களை தீர்க்கும் கீழாநெல்லி!!

கீழாநெல்லி :

  • தலை வலி தொல்லையால் அவதி படுவோர் கீழாநெல்லியின் வேரை நீருடன் சேர்த்து காய்ச்சி அருந்த நல்ல பலனை கொடுக்கும்.
    ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தையும் சுத்திகரித்தும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையில் இருந்து விடு படலாம்.
    உடல் சூட்டை தணித்து ஆரோக்கிய வாழ்வை கொடுக்கும் தன்மை கொண்டது கீழாநெல்லி கீரை.

இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து உடலில் ஏற்படும் கட்டிகள், ரத்த கசிவுகள் போன்ற அனைத்திற்கும் பயனுள்ளது.

சிறுநீரக கோளாறுகள் நீங்கும் மற்றும் இதனுடன் இஞ்சி சாறு, மிளகு தூள், உப்பு என அனைத்தும் சேர்த்து சமைத்து சாப்பிட மஞ்சள் காமாலை வராமல் தற்காத்து கொள்ளும், அதனால் வர கூடிய பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.

  • இதன் கீரைகள் மூலம் கண்களில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கும் மற்றும் நல்ல பார்வை திறனை கொடுக்கும்.
    அரிப்புகள் இருக்கும் இடத்தில் கீழாநெல்லி இலைகளை அரைத்து பூசி வர நாளடைவில் மாற்றங்களை காணலாம். அரிப்புகளால் உருவாகும் புண்கள், வீக்கம், சிரங்கு போன்றவையே குணம் அடையும் பண்பு கொண்டது.

Share this story