Tamil Wealth

உணவுகளில் துணை உணவாக பயன்படுத்துவதன் குறைபாடுகள் !

உணவுகளில் துணை உணவாக பயன்படுத்துவதன் குறைபாடுகள் !
  • அனைவரிடம் இருக்கும் பழக்கம் சாப்பிட பின் குளிர்பானம் ஏதேனும் ஒன்றை அருந்த வேண்டும் அதிலும் முக்கியமாக அசைவ உணவுகளை உட்கொண்ட பின் கண்டிப்பா குளிர்ச்சி நிலையில் இருக்கும் குளிர்பானத்தை குடித்தால் இறைச்சி செரிக்கும் என்று நினைத்து குடிக்கிறார்கள். ஆனால் அப்படி அருந்த கூடாது. எந்த உணவு சாப்பிட்டாலும் உடனே குளிர்பானம் மட்டுமல்ல நீரை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து நீர் அல்லது ஏதேனும் குடிக்க நல்லது.
  • கோதுமையை கொண்டு ரொட்டி செய்து சாப்பிடுபவர்கள் இனிப்பு சுவை வேண்டும் என்று ஜாம் சேர்க்கிறார்கள். இது வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். தவிர்ப்பது நல்லது.
  • இறைச்சி என்றாலே அது செரிமானம் அடைய அதிக நேரம் எடுக்கும் அதற்கு உகந்த வகையில் உதவும் காய்கறியே இந்த தக்காளி.
    தக்காளியில் உணவுகளை விரைவில் செரிக்கும் பண்பு காணப்படுவதால் அனைத்து அசைவ உணவுகளையும் விரைவில் செரிக்கும். அசைவ உணவுகளில் தக்காளியை சேர்த்து கொள்ளுங்கள் நன்மை பெறுங்கள்.

Share this story