வெந்தயம் தெரியும் ஆனா அதோட பயன் தெரியலையா!

நம் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கவும், மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா, வெந்தயத்தை நீரில் நன்கு நனைய வைத்து அந்த நீரை தினமும் பருகலாம் அல்லது வாரத்திற்கு இரு முறை காலையில் பல் துலக்கிய பின் குடிக்க மேற்கூறிய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்பது உண்மையே.
உடலை வலுவாகவும் கட்டுக்கோப்பாகவும் வைக்க வேண்டும் என்று விரும்புவோர் இதை உணவில் அல்லது எதாவது நீர் பானத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.
சாப்பிட உணவு செரிக்கவில்லை என்றால் வெந்தயத்தை பொடி செய்து நீரிலோ அல்லது தயிர், மோர் எதாவது ஒன்றில் கலந்து குடிக்க அசைவ உணவு அல்லது கடின உணவுகள் ஜீரணம் அடையும். உங்களுக்கு சர்க்கரை வியாதியா இதை உணவில் அல்லது காப்பியில் சேர்த்து கொள்ளுங்கள், இது உங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் திறன் உள்ளது..
வயிற்றில் எதாவது கோளாறுகள் ஏற்பட்டால் வெந்தயத்தை பொடி செய்து உணவில் சேர்த்துக்கொள்ள வயிற்று பிரச்சனை தீர்ந்து ஆரோக்கியத்தை பெறுவீர்கள்.