Tamil Wealth

சில மணி நேரத்தில் உணவு கட்டுப்பாடு உங்கள் எடையை குறைக்க உதவும் !

சில மணி நேரத்தில் உணவு கட்டுப்பாடு உங்கள் எடையை குறைக்க உதவும் !

உடல் எடையை குறைக்க உதவும் இந்த சில மணி நேர உணவு கட்டுப்பாட்டை பற்றி தெரிந்து கொண்டு அதனை மேற்கொள்ளலாம்.

உணவு கட்டுப்பாடு :

சில மணி நேரம் உணவு கட்டுபாடு என்பது இப்பொழுது நீங்கள் காலை 7 மணிக்கு உணவு எடுத்து கொள்கிறீர்கள் என்றால், அடுத்து 10 மணிக்கு உணவை எடுத்து கொள்ள வேண்டும். இதுவே உங்கள் எடையை அதிகரிக்காமல் கொழுப்புகளை எரிக்க பயன்படும் சில மணி நேர உணவு கட்டுப்பாடு.

இதனை செய்வதினால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் நமது உடலை சீராக வைத்து கொள்ள உதவும் மற்றும் இதனை தொடர்ந்து மேற்கொண்டால் உங்கள் எடை வாரத்திற்கு ஒரு கிலோ குறையும் மற்றும் உடலுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு அனைத்தும் சம நிலையில் இருக்கும்.

நமது உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கொழுப்புகள்:

ஒரு நாளைக்கு கட்டாயம் 1450 கலோரிகள் தேவை படும். இதனை சரி செய்து நமது எடையை குறைக்க வேண்டும் என்றால் மேற்கூறிய உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இந்த உணவு கட்டுப்பாட்டை வீட்டில் இருப்பவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும், அவர்களுக்கு மிகவும் உகந்த முறையே. வேலை செய்பவர்கள் இதனை முறைப்படி மேற்கொள்ள முடியாது.

நாம் என்னதான் உணவுகள் கட்டுப்பாட்டை கொண்டாலும் கட்டாயம் தேவையானது சீரான உடற்பயிற்சி. உடற்பயிற்சி இல்லை என்றால் எந்த டயட் இருந்தும் பயம் அற்றதாகத்தான் இருக்கும்.

உணவு பழக்க வழக்கம் :

நீங்கள் எடுத்து கொள்ளும் அசைவ உணவுகளோ அல்லது அதிக இனிப்பு சுவை கொண்டது, அதிக கலோரிகளை கொண்டதோ எதுவானாலும் அதனை அளவான முறையிலே எடுத்து கொள்ள வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். முக்கியமாக டார்க் சாக்லேட்ஸ் அதிகம் உட்கொள்ள கூடாது, குறைந்த அளவிலே சாப்பிடுங்கள்,

Share this story