உடல் எடையை குறைக்க ஏழு நாள்கள் செய்ய வேண்டிய டயட் முறை!
Mon, 6 Nov 2017

உடல் பருமன் எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய ஒரு பரவலான பிரச்சனையாகவே உள்ளது. உடல் பருமனை குறைக்க பலரும் பல டயட் முறையை செய்தும் பலனளிக்கவில்லையா. அப்போ கீழ்கண்ட டயட் முறையை பின்பற்றினாலே போதும். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டயட் முறையை பின்பற்றினாலே போதும்.
உடல் எடையை குறைக்க ஏழு நாள்கள் செய்ய வேண்டிய டயட் முறை:-
- முதல் நாள் பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழத்தை தவிர மற்ற எல்லாவிதமான பழங்களையும் சாப்பிடலாம்.
- இரண்டாம் நாள் முழுவதும் பச்சையான காய்கறிகளையோ அல்லது வேக வைத்த காய்கறிகளையோ சாப்பிட்டாளே போதும். உருளைக் கிழங்கை காலையில் மட்டும் சாப்பிட்டால் போதும்.
- மூன்றாம் நாள் காய்கறிகள் மற்றும் பழங்கள் இரண்டையும் சாப்பிடலாம். பழங்களில் வாழைப்பழத்தையும் காய்கறிக்ளில் உருளைக் கிழங்கையும் தவிர்த்தல் வேண்டும்.
- நான்காம் நாள் மூன்று டம்ளர் பால் மற்றும் ஆறு முதல் எட்டு வாழைப்பழத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
- ஐந்தாம் நாள் அசைவ பிரியர்கள் அசைவ உணவு எடுத்து கொள்ளலாம். சைவ பிரியர்கள் சீஸ் அல்லது பழுப்பு அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
- ஆறாம் நாள் பழங்களின் சாறுகள் மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிடலாம்.
- ஏழாம் நாள் பழுப்பு அரிசி சாதம், பழச்சாறு, காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம்.
மேற்கண்ட டயட் முறையின் போது கிரீன் டீ அல்லது இனிப்பு இல்லாத டீ மட்டுமே குடிக்க வேண்டும். சோடா, குளிர்பானம், மது போன்றவற்றை குடிக்காமல் இருக்க வேண்டும். எல்லா நாளும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.