சோடா உப்பினை சருமத்தின் எல்லா பிரச்சனைக்கும் பயன்படுத்தலாம் என உங்களுக்கு தெரியுமா?

சோடா உப்பினை பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தி இருப்போம். ஆனால் சோடா உப்பிலும் சருமத்திற்கு நன்மை சேர்க்கும் குணம் அதிகப் படியாக உள்ளது. சோடா உப்பினை சருமத்தின் பல பிரச்சனைக்கும் பயன்படுத்தும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

சோடா உப்பினை சருமத்தில் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-

  • முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுபடுத்தி பருக்கள் ஏற்படுவதை தடுக்கும். முகப்பரு தழும்புகளை மறைக்க சோடா உப்பினை 2 வாரங்கள் பயன்படுத்தினால் மட்டுமே போதும். தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
  • முகத்தில் உள்ள கரும்புள்ளியை மறைப்பதற்கு சோடா உப்பினை முகத்திற்கு ஒரு வாரம் பூசி வந்தால் போதும் கரும்புள்ளி மறைவதை கண்கூடாக பார்க்க முடியும்.
  • வெயிலில் செல்வதால் கைகளில் ஏற்பட்ட கருமையை சரி செய்ய சோடா உப்பினை பயன்படுத்தினால் கருமை மறைந்து விடும்.
  • சோடா உப்பில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்.
  • எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களா நீங்கள்? அப்ப சோடா உப்பினை பயன்படுத்தி வாரம் இருமுறை முகத்தில் ஸ்க்ரப் செய்தாலே போதும் சரும்ம் சுத்தமாகவும் பொலிவுடனும் இருக்கும்.
  • சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை சோடா உப்பு குணப்படுத்தும். காயங்களை குணப்படுத்தும் தன்மை சோடா உப்பிற்கு உண்டு. அலர்ஜியை தடுக்கும் ஆற்றலை கொண்டது சோடா உப்பு.

Share this story