சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம்!

சைக்கிள் ஓட்டுவது மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமையும். நம் உடல் உறுப்புகள் அனைத்தும் வலிமை பெற்று இயங்கும்.
சைக்கிள் ஓட்டுவது நல்ல உடற்பயிற்சி:
தினம் காலை சைக்கிள் ஓட்டுவது நல்ல உடற்பயிற்சி மற்றும் ரத்தத்தின் அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து மாரடைப்பு மற்றும் நீரழிவு நோயில் இருந்து பாதுகாத்து கொள்கிறது.
அதிகமான கொலஸ்ட்ராலை கொண்டவர்கள் தொடர்ந்து சைக்கிளிங் செய்ய உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைந்து நல்ல உடல் கட்டமைப்பை பெறுவார்கள்.
வயது முதிர்ந்த பிறகு ஏற்படும் எலும்பு வலிகள் மூட்டு வலிகள் எதுவும் நம்மை அணுகாமல் காக்கிறது.
காலையிலேயே சைக்கிளிங் செய்வதால் மனதிற்கு நல்ல சாந்தமான மன நிலையை கொடுக்கிறது.
கால்களில் மற்றும் கைகளில் இருக்கும் தசைகள் அனைத்தும் நல்ல வலு கொடுக்கும். ஞாபக திறனை அதிகரிக்க செய்கிறது.
வியர்வையின் மூலம் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும் அதன் மூலம் நம் உடலில் இருக்கும் அதிகமான வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.