கறிவேப்பிலை சத்தானது பயனானது தானே!

கறிவேப்பிலையை கண்டிப்பா உணவில் சேர்த்தே தீர்வோம் தாளிக்க, இதை நாம் சாப்பிட்டால் முடி நன்கு கரு கரு என வளரும். இதை எண்ணெயாகவும் அரைத்து வைத்து கொண்டு தினமும் தலைக்கு தேய்த்து வர கூந்தல் நீளமா வளருவது மட்டுமல்லாமல் கருமை நிறமாகவே இருக்கும். வெள்ளை முடி வருவதை தடுத்து விடும்.
தொப்பையை குறைக்க வேண்டும் என்று விரும்பினால் கறிவேப்பிலையை கட்டாயம் உணவிலும், வெறும் வயிற்றிலும் சாப்பிட ஆரம்பியுங்கள்.
ஹீமோகுளோபின் அளவு குறைவாய் இருப்பவர்கள் கறிவேப்பிலையை தொடந்து சாப்பிட அணுக்கள் அதிகரித்து ரத்த சோகை வராமலே தடுக்கலாம்.
சர்க்கரை வியாதி இருப்பவர்கள் எதையுமே சாப்பிட தயங்குவார்கள் இதை கட்டாயம் உபயோகியுங்கள் உங்களுக்கு ஏற்றதே.
சளி தொல்லையால் பாதிக்க பட்டவர்களே அதிகமா உள்ளார்கள், இதை சாப்பிட்டு வரலாம். இது இதய நோய்களுக்கும் மகத்தான இயற்கை மருந்து.
கறிவேப்பிலையை பொடியாகவும் செய்து உணவில் சேர்த்து கொள்ளலாம், இப்படி சாப்பிட இது உங்கள் கல்லீரலை சுத்திகரித்து, நச்சுக்களையும் வெளியேற்றும்.