ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏற்ற வெள்ளரிக்காய்!!

வெள்ளரிக்காய் அதிக அளவில் நீர்ச் சத்தினை அதிகம் கொண்ட காயாகும். இதனை வெயில் காலங்களில் பலரும் விரும்பி சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இதனை வெயில் காலங்களில் மட்டுமல்லாது அனைத்துக் காலங்களிலும் சாப்பிடுவது சிறப்பான பலனைக் கொடுக்கும்.
மேலும் வெள்ளரிக்காயில் கலோரியானது மிகவும் குறைவாக உள்ளதால் பலரும் இதனை உடல் எடையினைக் குறைக்கப் பயன்படுத்துவர். வெள்ளரிக்காயில் சாம்பார், பொரியல், கூட்டு, சாலட் என எந்த வகையில் சாப்பிட்டாலும் உடல் எடையானது குறையும்.
அதனால் மருத்துவர்கள் மட்டுமின்றி ஜிம் ட்ரெய்னர்கள் உட்பட பலரும், உடல் எடையை குறைக்க இதனையே பரிந்துரைக்கச் செய்கின்றனர். அதேபோல் வெள்ளரிக்காயானது மலச்சிக்கல் எந்த அளவு தீவிர நிலையில் இருந்தாலும் சரி செய்யும் தன்மை கொண்டது.
மேலும் வெள்ளரிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகவும் பரிந்துரைக்கப்படுகின்றது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரையச் செய்வதால் ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தினமும் ஒன்றினை எடுத்துக் கொள்வது நல்லது.
மேலும் இது முகப் பளபளப்பு, முடி அடர்த்தி, முடியின் ஆரோக்கியம் போன்றவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் சரி செய்கிறது.