சுரைக்காயை கொண்டு சிறுநீரக கோளாறுகளை போக்கலாம், எப்படினு தெரியுமா?

சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகளை போக்க உதவும் சுரைக்காய் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
சுரைக்காய் :
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும், இந்த சுரைக்காய் செரிமான கோளாறுகளை தீர்க்கும் மற்றும் தூக்கம் இன்றி காண படுபவர்களுக்கு சுரைக்காயை வேக வைத்து சாப்பிடலாம்.
தலை முடி பிரச்சனைக்கு சுரைக்காய் சாப்பிட கருமை நிற நீளமான கூந்தலை பெறலாம் மற்றும் சளி தொல்லைகளை நீக்க சுரைக்காயுடன் மிளகு, திப்பிலி, இஞ்சி, மிளகாய் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
இதில் அதிக குளிர்ச்சி இருப்பதால் மழைக்காலங்களில் உட்கொண்டால், காய்ச்சல், இருமல், சளி போன்ற தொல்லைகள் வரும்.
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க சுரைக்காயின் சாற்றினை தினம் முகத்திற்கு பயன்படுத்த நல்ல பலனை தரும்.
ரத்ததை சுத்திகரித்து ரத்த சோகையில் இருந்து நம்மை பாதுகாக்கும், ரத்த ஓட்டத்தை சீராக நடைபெற செய்ய சுரைக்காயுடன் தேனை கலந்து சாப்பிட ரத்த கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
வயிற்றில் ஏற்படும் கோளாறுகளை போக்க சுரைக்காயின் சாற்றுடன் தேனை கலந்து குடிக்க நல்ல பலனை கொடுக்கும் தன்மை கொண்டது.
சுரைக்காயை சாப்பிட கூடாதவர்கள் :
சுரைக்காயை பாடகர்கள், தொப்பை, பெரிய வயிறு கொண்டவர்கள் சாப்பிடவே கூடாது. பச்சையாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கோளாறுகள் :
சிறுநீரக நச்சுத் தொற்றுகள்
சிறுநீரக கற்கள்
சிறுநீரகத்தை தூய்மை
அலற்சிகள்
வலிகள்
ரத்த கசிவுகள்
மேற்கூறியவைகளை குண படுத்த சுரைக்காயை பயன்டுத்தலாம்.
சுரைக்காயில் இருக்கும் சத்துக்கள் :
இரும்புச்சத்து
வைட்டமின்கள்
கால்சியம்
நீர்சத்து
மேற்கூறிய சத்துக்கள் இருப்பதனால் கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும் இந்த சுரைக்காய்.
உடல் எடையை குறைக்க மிகவும் தேவையானதே நீர்சத்துத்தான். அதனையே அதிகம் கொண்டுள்ள சுரைக்காயை தினம் சாப்பிட விரைவில் உடல் எடை குறையும்.
பித்தம் :
பித்த கோளாறுகளை போக்கவும் மற்றும் வயதானவர்களுக்கு தேவையான புத்துணர்ச்சியை கொடுக்க சுரைக்காயை பொரித்தோ அல்லது வதக்கியோ சாப்பிடலாம் ருசியுடன் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.