வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை அழகு படுத்தலாம்!

சருமத்தை பராமரிக்கும் வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் போலவே சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளையும் போக்கும் மற்றும் தொற்றுகளிடம் இருந்து பராமரிக்கிறது. பச்சையாக சாப்பிடுவதால்சத்துக்கள் நேரடியாக கிடைப்பதால் பல உடல் நல கோளாறுகளில் இருந்து பாதுக்காக்கும்.
சருமத்திற்கு பயன்படும் வெள்ளரி :
செய்முறை :
வெள்ளரியை முதலில் நன்கு கழுவ வேண்டும் பின் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும். இதனை அப்படியே குடிப்பதன் மூலமும் சருமத்தை பராமரிக்கலாம் அல்லது சருமத்தில் பயன்படுத்துவதன் மூலமும் நன்மையே. வெள்ளரி சாற்றினை முகத்தில் கருமை இருக்கும் இடத்தில் தினமும் தடவி வர ஒரு வாரத்திற்குள் நல்ல பலனை காணலாம்.
சருமத்திற்கு பயன்படுத்த விரும்பினால் அதனுடன் சில பொருட்களை கலந்தும் உபயோகிக்கலாம். பொருட்கள் பின்வருமாறு.
1.மஞ்சள்
2.கடலை மாவு
3.எலும்பிச்சை
4.பாலாடை
5.தேன்
மேற்கூறிய பொருட்களையும் வெள்ளரி சாற்றுடன் கலந்து சருமத்தில் பாதிப்பு இருக்கும் இடத்தில் தினமும் பயன்படுத்த விரைவில் உங்கள் சருமத்தை பொலிவுடன் காணலாம் மற்றும் எண்ணெய் கசடுகள், பருக்களின் தொல்லைகள் வராது, முக அழகும் கெடாது.
மஞ்சளை கலந்து உபயோகிக்க வயதான தோற்றம் வராது மற்றும் கோடுகள் மறைந்து இளமையான தோற்றத்தை தரும்.
கடலை மாவு சேர்த்து உபயோகிக்க சருமத்தை வழு வழுப்பான தன்மையுடன், மிருதுவாக மாற்றும்.
எலும்பிச்சை சாற்றுக்கு சருமத்தை பராமரிக்கும் குணம் அதிகமே, அதோடு சருமத்திற்கு சிவப்பழகை கொடுக்கும் தன்மை உள்ளது. இதனுடன் பாலாடை கலந்து கொள்ள மிகவும் நல்லது.
தேன் ருசியை போலவே அழகான பொலிவையும் கொடுக்கும் ஆற்றல் கொண்டது, வெள்ளரி சாற்றுடன் கலந்து முகத்தில் உபயோகித்து பாருங்கள் நீங்களே காணலாம் மாற்றத்தை.