அழகிற்கு பயன்படும் பொருட்கள்?

பெண்கள் தங்கள் அழகை பராமரிக்கும் முறையில் பல பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
முகத்தில் அரைத்து பூசும் கஸ்தூரி மஞ்சள் :
மஞ்சளை அரைத்து தினம் முகத்தில் பூசி பின் கழுவ முகம் அழகு கொடுக்கும் மற்றும் மஞ்சளை பூசி கொண்டு வெயிலில் சென்றால் அதிமான வெப்பத்தினால் புற ஊதா கதிர்களின் தாக்கத்தினால் மஞ்சள் எதிரொலித்து கருமை நிறத்தை முகத்திற்கு கொடுக்கும்.
மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்த முகம் அழகு பெறுவதோடு முகத்தில் வளரும் தேவையற்ற உரோமங்களையும் நீக்கி மிருதுவான சருமத்தை கொடுத்து பொலிவை பெறும்.
முடி வளர்ச்சிக்கு உதவும் தயிர் :
வீட்டில் உணவிற்கு பயன்படும் தயிரை முடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். ஏனென்றால் முடி வளர்ச்சிக்கு தேவையான ஜிங்க் சத்துக்கள் அதிக அளவிலே காண படுகிறது.
அழகை கூட்டும் முல்தானி மட்டி :
முல்தானி மட்டியினை நீருடன் கலந்து முகத்தில் தினம் பயன்படுத்த முகம் கூடுதல் அழகை பெரும் மற்றும் மற்றும் முகத்தை பள பளவென்று வைத்து கொள்ளும்.