அழகுக்காக பயன்படும் செயற்கை இமைகள்! நல்லதா?

பெண்கள் தங்கள் கண்களை அழகு படுத்த பயன்படுத்தும் செயற்கையில் உருவான இமைகளை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் அழகு சேர்வதை போலவே தீமைகளும் ஏற்படும் என்பதை அறியாமல் செய்கிறார்கள்.
கண் ரப்பை :
கண்களில் இருக்கும் இமைகளின் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதால் இதனை கண்களிற்கு பயன்படுத்துகிறார்கள். இதனை நீண்ட நேரம் கண்களில் வைத்திருக்க கூடாது.
கோளாறுகள் :
கரு விழியில் பாதிப்பை ஏற்படுத்தும்
கண் இமைகளில் கோளாறுகள்
கண்களில் ஒவ்வாமை
கண் எரிச்சல்
கண்களில் வீக்கம்
கட்டிகள் உருவாகும்
அதிக ரசாயன பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் ரப்பைகளை பயன்படுத்தினால் கண்களின் பார்வையில் குறைபாடுகள் வரும் மற்றும் கண் பார்வைக்கே ஆபத்தாக அமையும்.
கண்களுக்கு பயன்படுத்தும் இந்த கண் ரப்பைகளை ஓட்டுவதற்கு பயன்படும் பசைகள் காய்ந்த பிறகு தானாகவே உதிர்ந்து விடும் மற்றும் இது கண்களை விரைவில் பாதிக்கும். இதனால் உங்கள் உண்மையான இமைகளும் உதிர்ந்து , மீண்டும் வளர நீண்ட நாட்கள் எடுக்கும்.
கண் ரப்பைகளால் கண்களில் வலிகள் உருவாகி, சிவந்த கண்களை கொடுக்கும், அப்படி தெரிந்தால் பயன்படுத்த கூடாது. இல்லையென்றால் உங்கள் கண்களில் அதிக பாதிப்புகளை காண நேரிடும்.
கண் ரப்பைகளின் வளர்ச்சி தான் உங்க பிரச்சனை என்றால் இயற்கை பொருட்களை பயன்படுத்தி முடிகளை வளர செய்யுங்கள், வேதி பொருட்களை பயன்படுத்தி கண்களை பாதிக்க வேண்டாம், இயற்கை பொருட்களால் எவ்வித கோளாறுகளும் வராது, சிந்தித்து செயல் படுங்கள்.