தைராய்டுக்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு மருத்துவரை ஆலோசியுங்கள் !

அறிகுறிகள்
உடல் பருமன் :
ஹைப்பர் தைராய்டு என்பது உடல் எடையை விரைவில் அதிகரிக்கும், தைராய்டு ஹார்மோன்களை எண்ணிக்கையை அதிகரித்து விடும்.
அயோடின் குறைபாடு :
கழுத்தில் ஏற்படும் வீக்கத்தினால் உண்டாகும், தைராய்டுக்கான சுரப்பிகள் ஒழுங்காக சுரக்காமல் வீக்கத்தை உருவாக்கும், இதற்கு காரணம் அயோடின் குறைபாடுகள் தான். கழுத்தில் இருக்கும் வீக்கத்தை கண்டு சாதாரணமாக விடாமல் மருத்துவரை அணுகுங்கள்.
ஹார்மோன்கள் :
தைராய்டு சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் எண்ணிக்கை அதிகரித்தால் உடலில் வலிகள் ஏற்பட்டு உடல் சோர்வை ஏற்படுத்தும் மற்றும் எலும்புகள், தசைகளில் வீக்கம் உருவாகி, பிடிப்புகளை உருவாக்கும்.
முடி உதிர்வு :
தைராய்டு பிரச்சனை இருந்தால் கொஞ்சம் முடி உதிர்வு ஏற்பட்டு, அதிகமாக உதிர ஆரம்பிக்கும், இது தலையில் வழுக்கையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
வலிகளை ஏற்படுத்தும் :
தைராயிடின் அறிகுறியாக எலும்புகள் பலவீனம் அடைந்து மூட்டுகளில் வலி மற்றும் முதுகு, கழுத்து, இடுப்பு வலிகள் உருவாகும், இதனால் உடல் எப்பொழுதும் ஒரு வித சோர்வு நிலையை கொண்டிருக்கும்.
மன நிலை :
மனத்தில் எப்பொழுதும் ஒரு வித குழப்பமான நிலை இருந்து கொண்டே இருக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் உருவாகும். மனதில் அழுத்தங்கள் ஏற்பட்டு ஒரு வேலையை கூட தெளிவான முறையில் செய்ய இயலாது. நேரத்திற்கு நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்ய முடியாமல் போகும்.
தைராய்டில் இரு வகைகள் :
ஹைப்பர் தைராய்டிசம்
ஹைப்போ தைராய்டிசம்
மந்த நிலை :
தைராய்டு சுரப்பிகள் செயல் படாமல் உடலை எப்பொழுதும் மிகுந்த சோர்வுடன் வைத்து கொண்டு செயல்களிலும் மந்த நிலையை கொடுக்கும். குடல்களில் கோளாறுகள் ஏற்படும் மற்றும் குடலிறக்கம் ஏற்படும்.
மேற்கூறிய அறிகுறிகள் உங்களிடம் காண பட்டால் யோசிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். சாதாரணமாக எண்ண கூடாது.