வீட்டின் சுத்தம் நம் சுத்தம்!
Sep 8, 2017, 16:35 IST

வீட்டில் குப்பைகள் சேருவதை தடுத்து அல்லது அதனை உடனே அப்புற படுத்த வேண்டும், இல்லையென்றால் பாதிப்புகள் நமக்குத்தான் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
வீட்டின் சுத்தம் :
- சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் இருந்து கிடைக்கும் கழிவுகளை உடனே சுத்தம் செய்து குப்பை தொட்டியில் போட வேண்டும். போட்டு விட்டதும் நல்லது என்று எண்ணாதீர்கள் குப்பை தொட்டியை எப்பொழுதும் மூடியை கொண்டு மூடி வைக்க வேண்டும். அதிலிருந்து வெளிப்படும் துர்நாற்றங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
வீட்டின் கதவு, ஜன்னல்களை திறந்து வைத்ததால் தான் கெட்ட நாற்றங்கள் இருந்தால் வெளியே சென்று நம் சுவாசத்திற்கு நன்மை அளிக்கும்.
- வீட்டில் இருக்கும் தூசுகள் எல்லாத்தையும் அறவே நீக்க வேண்டும் ஒவ்வாமையால் அழற்சி ஏற்பட்டு தும்மல் மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- எந்த ஒரு உணவையும் மூடி வைக்க வேண்டும்.
காலணிகளை வெளியே இட வேண்டும். வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் வரும் பொழுது கால்களை சுத்தம் செய்த பின்னரே வீட்டினுள் செல்லலாம்.