அதிக மருத்துவ குணங்களை கொண்ட தாவரத்தை பற்றிய பதிவுகளை பார்க்கலாம்!

இன்று மூலிகை தாவரத்தை தவிர்த்து எதெற்கெடுத்தாலும் மாத்திரைகளை விழுங்கும் பழக்கம் தான் இருக்கிறது, மூலிகையில் இருக்கும் அதிகமான மருத்துவ குணங்களை அனைவரும் மறந்து விட்டார்கள்.
துளசி
தீராத தலைவலியா !
அடிக்கடி ஏற்படும் தலைவலி மற்றும் தீராத தலைவலியை போக்க உதவும் துளசி இலைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தலைவலி ஏற்படுவதற்கு அதிக காரணமே உடல் சூடு தான் இதனை குறைத்தாலே போதுமானது, நீங்கள் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
துளசி இலைகளை எடுத்து கொள்ளுங்கள், அதனை சுத்தம் செய்து மிஸ்யில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் சந்தன பொடியை கொஞ்சம் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள், தலைவலி ஏற்படும் பொழுது நெற்றியில் தேய்க்க வேண்டும், சிறிது நேரத்தில வலிகள் குறைவதை காணலாம்.
சிறுநீரக கோளாறுகள் :
சிறுநீரக கோளாறுகளை போக்கும் வகையில் உதவும் துளசி இலைகளை சுத்தம் செய்து அரைத்து அதனுடன் கருப்பட்டி, வெல்லம் அல்லது தேனை கலந்து தினம் குடித்து வர உடலில் இருக்கும் நச்சுக்களும் வெளியேறும், நோய் எதிர்ப்பு திறனையும் கொடுக்கும்.
குளியலில் பயன்படுத்தலாம்!
நீங்கள் குளிப்பதற்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு முன்னரே துளசி இலைகளை அரைத்து அதன் சாற்றினை நீருடன் கலந்து கொள்ளுங்கள். பின்னர் குளிக்க நீரும் நறுமணத்துடன் இருக்கும், உடலில் வியர்வையால் பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் தொற்றுக்களை தடுக்கும், வியர்வையால் உடலில் ஏற்படும் நாற்றங்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
ரத்த அழுத்தம் :
தினம் துளசி இலைகளை சுத்தம் செய்து சாப்பிட இதய கோளாறுகளை ஏற்படுத்தாது மற்றும் ரத்தத்தை சுத்திகரித்து ரத்த ஊட்டத்தையும் சீராக வைத்து கொள்ளும் தன்மை கொண்டது.
வயிற்று கோளாறு :
துளசி இலைகளை தினம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் கிருமிகள் அழிந்து வயிற்றில் எவ்வித கோளாறுகளும் ஏற்படாது. நார் சத்துக்கள் இருப்பதால் அதிக பசியை ஏற்படுத்தாமல், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.