முடிகளை நிற மாற்றம் செய்வதால் உண்டாகும் தீமைகளை தெரிந்து கொள்ளலாம்!

இன்றைய காலத்தில் அனைவரும் தங்கள் முடிகளை அழகு படுத்தும் விதத்தில் முடிகளின் நிறத்தை மாற்றுகிறார்கள் மற்றும் நரை முடியை மறைக்கவும் இப்படியெல்லாம் செய்கிறார்கள். இது அவர்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரிவது இல்லை.
ஒவ்வாமை பிரச்சனை :
சிலருக்கு முடிகளில் உபயோகிக்கும் வேதி பொருட்களின் மூலம் சருமத்தில் ஒத்துக்கொள்ளாமல் அரிப்புகள், தழும்புகள் ஏற்படும் அபாயம் உண்டு. அப்படி அறிகுறிகள் தெரிந்தால் கிரீம்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள். நரை முடியை போக்க பயன்படுத்தும் வேதி பொருட்களும் சில நேரங்களில் பாதிப்பை உண்டு பண்ணும்.
முடிகளின் நிறம் :
இளைய தலைமுறையினர் தங்கள் முடிகளை அழகு படுத்துகிறோம் என்று அதிக வேதி பொருட்களை கொண்டு தயாரிக்க பட்ட கிரீம்களை தலைக்கு பயன்படுத்துவதால் புற்று நோய்க்கான அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முடிகளின் நிறத்தை முழுவதும் மாற்றும் வகையில் அதிக கிரீம்களை முடிகளில் பயன்படுத்துவதால் முடி வளர்ச்சி பாதிக்கபட்டு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும்.
பெண்களுக்கு அபாயம் :
பெண்கள் நீளமான கூந்தலை அழகு படுத்தும் விதத்தில் தலைக்கு அதிகம் பயன்படுத்தும் வேதி பொருட்கள் மூலம் கருப்பையில் கோளாறுகளை உண்டு பண்ணும் அளவிற்கு இதில் இருக்கும் கெமிக்கல்கள் உள்ளன.