ஒருமுறை சமைத்த எண்ணெயினை மீண்டும் உபயோகிப்பதால் என்னதான் ஆகும்?

ஒருமுறை சமைத்த எண்ணெயினை மீண்டும் உபயோகிப்பது என்பது நம் வீடுகளில் சர்வ சாதாரணமாக நடந்தேறும் விஷயமாகும். அதனால் பாதிப்புகள் ஏற்படுமா? என்று கேட்கிறீர்கள் என்றால் என்னுடைய பதில் நிச்சயம் ஆம் என்றே இருக்கும்.
அதாவது பொதுவாக நாம் ஏதாவது ஸ்நாக்ஸ் வகைகளைப் பொரித்த எண்ணெயினைக் கொண்டு குழம்புகள் வைப்பதுண்டு. ஆனால் எண்ணெயின் நிறம் எந்த அளவு அதன் சாதாரண நிறத்தில் இருந்து மாறியுள்ளதோ, அதே அளவு அது அதன் இயல்பினை இழந்துவிட்டது என்று அர்த்தம்.
அதுபோன்ற எண்ணெயில் சமைத்த உணவுகள் கெட்ட கொழுப்பினை உடலில் சேர்க்கும். மேலும் சில வகையான உணவு ரீதியான ஒவ்வாமைகளையும் ஏற்படுத்திவிடும்.
மேலும் இது புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகவும் உள்ளது. அதனையடுத்து இது பலரும் அறியாத நோயான ஆர்தோகுளோரோசிஸ் என்ற நோயினையும் ஏற்படுத்துகிறது. மேலும் பொதுவாக எண்ணெயானது உணவில் உள்ள சத்துக்களான புரோட்டின், கார்போஹைட்ரேட் என பல இழப்புகளை ஏற்படுத்துகிறது.
அதுவே இது போன்ற பயன்படுத்திய எண்ணெயினை மீண்டும் பயன்படுத்தும்போது சத்துகள் இழப்பானது கூடுதலாகவே உள்ளது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.