Tamil Wealth

வெள்ளை முடியா? இதெல்லாம் பயன்படுத்தி பாருங்க, உங்களுக்கே பலன் தெரியும்!

வெள்ளை முடியா? இதெல்லாம் பயன்படுத்தி பாருங்க, உங்களுக்கே பலன் தெரியும்!

நரை முடிகளை கொண்டுள்ளவர்கள் மிகுந்த வருத்தத்துடன் காண படுவார்கள், இதோடு முடி உதிர்வு, பொடுகு போன்றவையும் ஏற்படுகிறது, இதனை கட்டு படுத்த உதவும் சில மூலிகை மருத்துவம் பார்க்கலாம்.

அற்புத மூலிகை மருதாணி :

மருதாணி இலைகளை சுத்தம் செய்து அதனுடன் கறிவேப்பிலை, நெல்லிக்காய், தயிர் கலந்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை தலை முடிக்கு வாரத்திற்கு இரு முறை தேய்த்து அரை மணி நேரம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு குளிக்க வேண்டும். இது உங்கள் நரை முடியை பழுப்பு நிறத்தில் மாற்றும் மற்றும் இதனை தொடர்ந்து பயன்படுத்த நரை முடிகள் தடுக்க படும், முடி உதிர்வு கட்டுக்குள் வந்து நல்ல கூந்தல் வளர்ச்சியை பெறலாம்.

டீ :

டீயை குடிப்பது போலவே ப்ளாக் டீயை கொதிக்க விட்டு , ஆறிய பிறகு அதனை தலையில் வேர் நுனிகள் வரை நன்கு தேய்க்க வேண்டும். சிறிது நேரங்கள் கடந்த பிறகு நீரினை கொண்டு அலசினால் போதுமானது. இது உங்க முடி உதிர்வை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

எலும்பிச்சை :

எலும்பிச்சை பழம் முக அழகை கொடுப்பது போலவே தலை முடி வளர்ச்சிக்கும் உதவி புரிகிறது. இதனுடன் தேங்காய் எண்ணெயும் கலந்து, அதனை தலை முடிகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு தேய்த்து குளிக்க நல்ல முடி வளர்ச்சியை பெறலாம்.

வேதி பொருட்கள் :

முடிகளுக்கு உபயோகிக்கும் ஷாம்பூவில் அதிக வேதி பொருட்கள் மற்றும் அதிக திண்ம நிலையில் இருப்பதாய் தவிர்த்து ஈரப்பதம் இருக்கும் ஷாம்பூகளையே பயன்படுத்த வேண்டும்.

உருளை கிழங்கு :

உருளை கிழங்கின் சதை பற்றினை பயன்படுத்துவதை போலவே அதன் தோலினையும் கொண்டும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனை நீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு ஆரிய பின்னர் தலைக்கு குளித்து முடித்தவுடன் தலைக்கு பயன்படுத்துங்கள்.

Share this story