சிக்கன் சாப்பிடலாமா கூடாதா???

சிக்கன் சாப்பிடலாமா கூடாதா???

சிக்கன் இன்று அனைவருமே அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று. அதில் இருக்கும் நன்மைகள் ஏராளம். சிக்கனை பொரித்து சாப்பிடாமல் குழம்பு வைத்து சாப்பிடுங்கள் நல்ல ஆரோக்கியம்.

ரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தை போக்கி நலனை தரும். இதில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் அனைத்து எலும்புகளுக்கும் வலு கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை கொடுக்கும் திறன் கொண்டது சிக்கன்.

சிக்கன் வாரத்திற்கு ஒரு முறை எடுத்து கொள்ள இதய நோய்கள் வராது மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்து கொள்ளும். இதில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின் பி6 இதற்கு உதவுகிறது.

சிக்கன் பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, வயிற்று வலிகள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டது. சிக்கன் நம் உடலுக்கு தேவையான செலினியம் அதிகம் சுரக்க செய்வதால் மூட்டு வலிகள் மற்றும் மூட்டு சம்பந்தமான எவ்வித கோளாறுகளும் வராது.
சிக்கன் உடலுக்கு அதிக சூட்டையும் கொடுக்கும். ஆகையால் அதிகம் உட்கொள்ள வேண்டாம் அளவாகவே எடுத்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சிக்கன் அவர்களுக்கு நல்ல உடல் வளர்ச்சியையும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Share this story