அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தலாமா?

அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தலாமா?

சாதம் வடிப்பதற்கு முதலில் அரிசியை நீரில் நன்கு கழுவுவோம். பின் அந்நீரை வேண்டாம் என்று ஊத்திவிடுவோம். ஆனால் அதில் உள்ள நன்மைகள் யாருக்குமே தெரிவது இல்லை.

அந்நீரை  கொண்டு தலையில் தடவினால் முடி கொட்டுவது தடுக்கப்பட்டு நன்கு முடி வளர செய்யும்.

முகத்தை கழுவுவதன் மூலமும், முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி புது பொலிவு பெரும். கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக மறைவதை காணலாம்.

அரிசியில் இருந்து வெளியேறும் நிறமிகள் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க உதவுகிறது. முகத்தில் வரும் தழும்புகள் எண்ணெய் பிசுக்கு அனைத்தும் அகலும்.

தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் இதை ஷாம்பு போட்டு குளித்து விட்டு பின் அரிசி தண்ணீரால்  தலையை  கழுவி வர நல்ல தூக்கம் வரும், முடியும் நீளமாக வளரும்.

இதை சிறு குழந்தைகளுக்கும் தலை முடியை வளர செய்ய பயன்படுத்தலாம். அந்நீரை செடிகளுக்கு ஊத்துவதன் மூலம் செடி கொடிகள் எல்லாம் செழிப்பாக வளரும் தன்மையை கொண்டு உள்ளது.

Share this story