தண்ணீரை மட்டுமே கொண்டு உடல் எடையை குறைக்கலாமா?

உடல் எடையை குறைக்க மிகவும் எளிதான முறைதான் தண்ணீரை மட்டுமே அருந்துவது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற தினம் அதிகம் தண்ணீரை குடிக்க வேண்டும், இது உடலில் இருக்கும் கலோரிகளை உடனே கரைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. நீங்கள் குடிக்கும் தண்ணீர் 60 நிமிடங்களிலே கலோரிகளை வெளியேற்றும்,
வெந்நீர் :
நீரினை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதினால் கலோரிகள் விரைவில் எரிக்க படும். சாதாரண நீரில் இருக்கும் நுண் கிருமிகள் கூட கொதிக்க வைக்கும் பொழுது அழிந்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
எடையை குறைக்க நீரை அருந்துங்கள் !
நீங்கள் குடிக்கும் நீரின் அளவை பொறுத்தே உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்க படும். நீரினை அதிகம் அருந்த அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். நீரினை அதிகம் அருந்துவதால் உடலுக்கு எவ்வித கோளாறுகளும் ஏற்படாது. எடையை குறைக்க மிகவும் சுலபமான வழிமுறை தான் நீர் அருந்துவது.
ஆய்வு அறிக்கை :
ஒரு நாளைக்கு 0.5 லிட்டர் குடிக்கும் நீரினால் உடலில் இருக்கும் கலோரிகளின் 23 கலோரிகள் எரிக்க படுகின்றன. நீங்க குடித்த 60 நிமிடங்களிலே கலோரிகள் எரிக்க ஆரம்பித்து விடும்.
சரும கோளாறுகள் :
அதிக நீரினை அருந்துவதால் உடல் எடை குறைவதோடு சருமத்தில் ஏற்படும் கோளாறுகள் தடுக்கப்படும் மற்றும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்கும், உடலுக்கு நீர் சத்து கொடுத்து ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும்.
நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் :
நீரில் இருக்கும் சத்துக்கள் நம்மை நோய் தொற்றுகளிடம் இருந்து பராமரிக்கிறது. உடலில் இருக்கும் நச்சு தன்மையை சிறுநீர் வழியாக வெளியேற்றி, உடலுக்கு எவ்வித குறையும் வராமல் பாதுகாத்து கொள்கிறது. கெட்ட கொழுப்புகளால் ஏற்படும் வியாதிகளிடம் இருந்தும் மற்றும் நீர் சத்து குறைவால் உண்டாகும் கோளாறுகளிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ளும் ஆற்றல் கொண்டது.