சருமத்திற்கு அழகை கொடுக்க உதவும் கற்பூரத்தை பயன்களை காணலாமா?

முக அழகிற்கு எதையெல்லாம் பயன்படுத்துகிறோம். கற்பூரத்தை பயன்படுத்தி பாருங்கள் அதிசயத்தை காண்ப்பீர்கள். கற்பூரம் திட நிலையில் இருப்பதால் அதனை நன்கு காய்ச்சி திரவ நிலைக்கு கொண்டு வந்து அதனை உபயோகிக்க நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :
1.கற்பூரம்
2.கடலை மாவு
3.எலும்பிச்சை
4.மஞ்சள்
பருக்களை போக்க வேண்டுமா?
முகத்தில் உருவாகும் பருக்களை போக்க கற்பூரத்தை பயன்படுத்தல் :
கற்பூரத்தை அப்படியே பயன்படுத்துவதை தவிர்த்து. திரவ நிலையில் இருக்கும் கற்பூரத்தில் துளசி இலைகளை நன்கு அரைத்து கெட்டியான பதத்துடன் வந்ததும், இரண்டையும் கலந்து முகத்தில் பரு இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரங்கள் கழிந்த பிறகு வெறும் நீரினை கொண்டு முகத்தை கழுவி வர பருக்களை விரைவில் போக்கலாம்.
கற்பூரத்தின் பாகுவுடன் சிறிது எலும்பிச்சை கலந்து முகத்தில் தடவ சில நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ நல்ல பலன் கிடைக்கும்.
அழகை தரும் மஞ்சளையும் திரவ நிலை கற்பூரத்துடன் கலந்து முகத்தில் எல்லா புறங்களிலும் தேய்த்து வர முகத்தில் இருக்கு எண்ணெய் பிசுக்குகளை நீக்கி அழகை கொடுக்கும். சூரியனின் தாக்கத்தினால் உண்டாகும் கருமை நிறத்தை மாற்றி பொலிவான தோற்றத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.
கடலை மாவை கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்திற்கு பயன்படுத்த அழகை கூட்டும் மற்றும் பருக்களை மறையும்.